Showing posts with label Karuthu Kandasamy. Show all posts
Showing posts with label Karuthu Kandasamy. Show all posts

Sunday, March 10, 2019

கி.ரா வின் கதவு

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் “கதவு” எனும் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பா அல்லது கட்டுரைத் தொகுப்பா என எனக்குத் தெரியவில்லை. அவர் இயல்பாக எழுதியிருப்பதை பார்க்கும் பொழுது, கதைத்தொகுப்பு போல தெரியவில்லை, உண்மைச் சம்பவங்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிறு கிராமத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்த சிறிய, பெரிய, எளிய, மனிதர்களின், அவர்களோடு உறவாடும் செல்ல பிராணிகளின் இயல்பான வாழ்க்கையை மாறாத மண் வாசத்தோடு நம் கண்முன் விவரிக்கின்றார். வழக்கம் போல அவரின் கதைக்களம் கரிசல் மண். "வாசிக்கும் வாசல்" நிகழ்விற்காக ஒவ்வொன்றாக படித்து உள்வாங்கிக் கொண்டே வருகிறேன், ஒரு கதை சட்டென எழுந்து உட்கார வைத்தது. "மாயமான்" எனும் தலைப்பில் உள்ளது. சரஸ்வதி இதழில் 1958 ஆம் வருடம் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். கதை சுருக்கம் இதுதான்.


தினசரி செய்தித்தாள் வாங்கி அவரின் கடையில் போட்டாலும், படிக்கும் வழக்கமில்லாத செட்டியார், அவரின் பெட்டிக்கடைக்கு வரும் ஒருவர் படிப்பதிலிருந்து, அரசாங்கம் கிணறு வெட்ட 400 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் எனும் செய்தியை தெரிந்து கொள்கிறார். செட்டியார் அவரின் புஞ்சை நிலத்தில் ஒரு கிணறு வெட்ட யோசிக்கிறார். சின்ன பெட்டிக்கடை, புஞ்சை நிலம், கூட்டுக்குடும்பம் என நிம்மதியான, பிரச்சனையில்லாத, சௌகர்யமான வாழ்க்கை.

சுதந்திரம் வாங்கிய பத்து வருடத்திலேயே அவரால் நேர்மையாக ரூ 400ஐ வாங்க முடியவில்லை அரசாங்கத்திடமிருந்து. அதனை வாங்க இன்று, நாளை என அலய விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இடைத்தரகர் உள்நுழைகிறார். 400 ரூபாயில் நூறு ரூபாய் கொடுத்த பிறகு, அவருக்கு 300 ரூபாய் மானியப் பணம் வருகிறது. கிணறு வெட்ட ஆரம்பித்தவுடன் பணம் பத்தாமல் மேலும் 500 ரூபாய் கடன் வாங்குகிறார். பணம் படைத்த நாயக்கரிடம் செல்கிறார். இவர் கடன் கேட்டவுடன், நாயக்கர் சரி என்று சம்மதித்ததவுடன் செட்டியாருக்கு மகிழ்ச்சி. ஆனால் கி.ரா இவ்வாறு எழுதுகிறார் 'நாயக்கரின் கண் முன் செட்டியாரின் ஐந்து ஏக்கர் வந்து போனது' என்று. இதைவிட எளிதாக நாயக்கரின் கேரக்டரை சொல்ல முடியாது.

கிணறு வெட்டி முடிச்சாச்சு. நல்ல தண்ணீர். அதை ஊர் மக்களே வந்து குடிக்க எடுத்துக்கிறாங்க. ஆனாலும் பாசனத்திற்கு போதாத தண்ணீர். இன்னும் கொஞ்சம் அடி தோண்டினால் மட்டுமே பாசனத்துக்கு உதவும். கூடவே கமலையும், மாடுகளும் வாங்க வேண்டும். மீண்டும் நாயக்கரிடம் இன்னும் கொஞ்சம் கடன் வாங்குகிறார். நாயக்கர் ஏக்கருக்கான விலை கணக்கு போட்டு அடமானத்தில் வைக்க சொல்கிறார். குடும்பத்தினர் சம்மதத்தோடு கையெழுத்திட்டு நிலத்தை அடமானமும் வைத்து விடுகிறார். பத்திரத்திற்கும், உண்மை நிலவரத்திற்கும் இருக்கும் ரூபாய் முரணை கதையில் கி.ரா இயல்பாக பதிவு செய்துள்ளார்.

'சரி, சீக்கிரம் கடனை அடைக்கலாம், அதனால முதல் வருடம் மிளகு போடலாம்' என ஏற்பாடு செய்து முடிக்கையில், அரசாங்கத்தின் அறிவிப்பு பேரிடியாக உள்ளது. மானியம் வாங்கி கிணறு வெட்டி உள்ளவர்கள் மிளகு போன்ற பணப்பயிர்களை அறுவடை செய்ய மூன்று வருடம் தடை விதிக்கிறது. கையில் இருக்கும் காசை வைத்து கேப்பை பயிரிடுகிறார். இடைப்பட்ட காலத்தில் கடையில் வியாபாரம் படுத்து விடுகிறது. பயிரின் அறுவடை காலத்தில் கிணற்றில் தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை, தாது வருடப் பஞ்சம் என்கிறார்கள். நாயக்கர் முதல்வருட வட்டியை கட்ட சொல்கிறார். நகைகளை விற்று அந்த வருடம் கட்டி விடுகிறார். வட்சியினால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு ஆந்திராவுக்கும், தஞ்சாவூர் நோக்கியும் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.

அடுத்த வருடம் கடனை கட்டமுடியாமல் ஊரைவிட்டு, நிலத்தை விட்டு, தாயை இழந்து குடும்பத்தோடு செட்டியாரும் வெளியேறுகிறார். அப்பொழுதும் பேப்பர் வாங்கும் பழக்கத்தை விடாத செட்டியார், ரயில் நிலையத்தில் வாங்கி அவர் இருக்கையின் பக்கம் வைத்திருக்கிறார். அங்கு வரும் பயணி ஒருவர் செய்தியை படிக்கிறார் 'கிணறு வெட்ட அரசாங்கம் கொடுத்த 400 ரூபாய் திட்டம் வெற்றி பெற்றதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக'.... பேப்பரைப் பிடுங்கி வெளியே வீசி விடுகிறார். இந்த இடத்தில் கட்டுரை/கதை முடிகிறது

ஒவ்வொரு கதைமாந்தர்களின் பெயர்களையும், பெயரின் பின் சாதியை போட்டுக்கொள்ளும் அன்றைய வழக்கப்படி எழுதியுள்ளார். அன்றைய காலகட்ட கதை அதனை நெருடாமல் செல்கின்றது. ஒவ்வொரு பெயரின் பின்னாலும் இருந்த சாதி தமிழகத்தில் மட்டும் எங்கே, எப்படி போனது (பெயரில் மட்டுமாவது) என்று தந்தை பெரியாரை யோசிக்க வைக்கின்றது.

ஒவ்வொரு இடங்களிலும் அந்தக் காலத்திய கிராமத்து சூழ்நிலை, அங்குள்ள மனிதர்கள், மக்களின் இயல்பான வெகுளித்தனமான வாழ்க்கை, கடன் கொடுக்கும் வசதி படைத்தவர்களின் மனநிலை, அரசு எந்திரம் என நெருடாமல் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கிறார்.


இது தவிர, இந்தப் புத்தகத்தில் மற்ற கதைகளிலும் சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகான எழுத்தில் நெகிழச் செய்பவர், ஒவ்வொரு கதையிலும் சின்ன சின்ன சம்பவங்களில் அந்தக் காலகட்டத்திய அரசாங்க அலுவலர்கள் போக்கை சாடிக் கொண்டே அல்லது இயல்பாக விவரித்துக்கொண்டே சென்றிருப்பார். சுதந்திரம் அடைந்து பத்து வருடங்களுக்கு பின் எப்படி இருந்ததோ, அதுபோலவே கிட்டத்தட்ட கதை எழுதி 60 வருடங்களுக்குப் பிறகும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் கதை பொருத்துகிறது. அனேகமாக வினைத்தொகைக்கு உதாரணமாக கூறலாம்.. அரசாங்க இயந்திரம் அப்படியேதான் இருக்கின்றது அல்லது அதைவிட மோசமாகி இருக்கின்றது. அன்று போலவே இன்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கின்றனவா என்பது விடை தெரியாத கேள்வி. ஆசையை தூண்டும் அரசின் திட்டங்கள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது இப்போதும், அப்பொழுது போலத்தான் போல.

யார் கண்டது, அன்று கரிசல் காட்டில் இருந்து தஞ்சைக்கு கிளம்பி வந்து விவசாயம் செய்தவர்கள் தான், சில பல தலைமுறைகளாக "சோழநாட்டில் சோறுடைத்து" நமக்குப் பசி ஆற்றிவிட்டு, இன்று ஹைட்ரோகார்பனால் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

இதுபோல நடு இரவில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டாமலிருந்த சாதாரண, விவசாய, எளிய, நடுத்தர மக்களின், சிறு குறு, குடிசைத் தொழில்களின் வாழ்க்கையை தடம் புரட்டி இருக்கலாம். மனிதர்களோடும், மண்ணோடும் இயற்கையோடும், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், இன்று ஏதேனும் ஒரு நகரத்தில் செக்யூரிட்டியாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ, பிழைத்துக்கொண்டு இருக்கலாம்.

உலகமயமாக்கலுக்குப் பின், அன்று ஏர் பிடித்து, மாடு கன்னு வைத்து, நீர் பாய்ச்சி விவசாயம் செய்த வேளாண் குடியினரின் ஒரு வகையினர் மேலே படித்து வெளியேறி பெரு நகரங்களில் பொருளீட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஊரோடு வாழும் பெற்றோர்கள், சில வருடங்களுக்கு ஒருமுறை வயலை நனைத்துவிட்டு செல்லும் வாய்க்கால் முறை தண்ணீருக்காகவும் அல்லது வானம் அழுகும் என்று எதிர் பார்த்துக்கொண்டு காய்ந்து கிடக்கும் நிலங்களை புரோக்கர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை மட்டும் பயிரிட்டுக் கொண்டு, ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை வருகை தரும் பேரக் குழந்தைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

மற்றொரு வகையினர், இதிலிருந்து வேறுபட்டு விவசாயமே போதும் என்று திருப்தியுடன் அதிகம் படிக்காமல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி, தொடர்ந்து விவசாயத்திலேயே ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் குடும்பம், அன்று அவர்கள் இருந்த மிடுக்கோடு, செல்வச் செழிப்போடு இன்று இருக்கிறார்களா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர்களின் மகள்களுக்கு எப்பாடு பட்டாவது திருமணம் செய்து வைத்திருந்தாலும், மகன்களுக்கு? இந்த படிப்பு வித்தியாசங்களாலும் விவசாயம் மட்டுமே வாழ்வு என்றும் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் பெண் தர மறுக்கும் சமூகம் தானே இது. அப்படியே கல்யாணமாகி இருப்போரும் சுற்றத்தாரின் வாழ்க்கைக்கு ஈடுகொடுக்க நேர்மையாக என்ன செய்வதென்று தெரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை கைமாற்றிக் கொண்டு இருந்தவர்களும், கடன்பட்டு இறந்தவர்களும் கண்முன் வந்து போகிறார்கள்.

இந்தியாவின் GDPல் 18 சதவீதமும், 50 ℅ மக்களுக்கான வாழ்வாதரம் விவசாயத்தை ஒட்டியே உள்ளதாக புள்ளி விவரங்கள் வருகின்றன. விவசாயிகளின் பேரணி, தொடர் போராட்டங்கள், அவர்களுக்கான உரம் என்ற பெயரில் மானியம், இவைகள் உண்டு செய்யும் கடன், அதனால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் என பல கேள்விகளுக்கு என்ன தீர்வு என்பதை முன்னிருத்தாமல் மௌனமே அரசுகளிடமிருந்து. மௌனத்தின் சாட்சியாக நாமும்.




Thursday, October 28, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்





Inspiring story..,

I have read through, voted and circulating to you all., thatz the minimum that I can do

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்றுமட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாகஉணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒருராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுகசேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாகஇருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்.அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல்ஒட்டு போடுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்தரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக,மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்துகொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்கபட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்குநவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காகநாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விடஇது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது
: 29
இருப்பு
: மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது
நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும்அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம்.அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டிவிடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்துசெய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்கஇந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பதுசாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைவல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலைகிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர்அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டுபெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கிவீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்கஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறுகிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவுதருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரதுஅன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான்என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லிஅழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களைபார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார்.இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல்தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில்வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்றபைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களைபார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்தஅளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்னசெய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில்மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்தமாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல.இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரைபார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறுஉதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும்ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான்
பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்துவைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail :
ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டுபோடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பதுபெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதைபதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்


-- It is Forwarded message--

Wednesday, February 20, 2008

Free Raise

Visit the Website & play web game.
For each correct answers, you will be donating 20 grains of raise to poor.
FreeRice is a sister site of the world poverty site, Poverty.com.
FreeRice has two goals:

>>Provide English vocabulary to everyone for free.
>>Help end world hunger by providing rice to hungry people for free.

When you are free, add feeds to poor & improve your vocabulary too.
Just google the words if you donno the synonyms.....


Courtesy: Sainandhan

Friday, January 11, 2008

Give your hand..

As Magadma said Village is the Piller of India.

Mostly all are come from Village background. Even though some of us City born and brought ups, their parents/grant parents are basically from Village area.

I came to know about the below site from my friend.
http://www.indiateam.org/

I thought of spread this one to all.


குறள் 681

பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...