Sunday, July 02, 2017
தொலைந்துபோன பட்டிமன்றமும், அறச்சலூர் திருவிழாவும்
புத்தகங்களைப் பேசுவோம்
--------------------------------------------------------------------------------------------------------------
மொடக்குறிச்சி கிருஷ்
8-Jun-2017
Thursday, May 25, 2017
நூலகம் - அகத்திலும், இணையத்திலும்
சித்திரை திருநாள் வாரம் சென்னையில் இருக்க நேர்ந்தது. ஞாயிறு மதியம் உணவு உண்ட பின், வழமையாக தூங்கி அ.
தொலைக்காட்சியுடன் பொழுதை கழிக்க விருப்பம் இல்லாமல், உண்ட களைப்புடன், மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'சுஜாதாவின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என அறிந்து, உடன் இருந்த அக்காவின் மகனையும் இழுத்துக்கொண்டு வண்டியை விரட்டினேன். நேரடியாக அரங்கை தேடி நுழைந்து கேட்க ஆரம்பித்தோம். நல்லதொரு நிகழ்வு. சுஜாதா அவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் அறிய முடிந்தது. நிகழ்வின் இடையே தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது(வரலாறு முக்கியம்). நூலகத்திற்கு முதன் முறையாக சென்றிருந்தேன். நிகழ்வு முடிந்தவுடன் அப்படியே நூலகத்தை சுற்றி பார்வையிட்டோம். படிக்கப்படாமல் அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புதிய புத்தகம்போல், குளிர்சாதன வசதி செய்யப்பட்டும், மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு நூலகம். சில வாரங்களாக பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வின் மூலம் பிரபல எழுத்தாளர்களின் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் அறிந்து, 'சென்னையிலேயே வசித்து இருக்கலாமோ' என்ற ஏக்கம் ஒரு கணம் வந்து சென்றது. இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு என நல்ல முயற்சிகள் திரு உதயச்சத்திரன் அவர்களால் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி. திருவான்மியூர் வழியாக திரும்புகையில், மாலை வெயிலில் கூட்டமாக இளைஞர்கள் கூட்டம் அள்ளியது சத்யம் வாசலில். 'சரி விடு, தியாஐராஜர் திரையரங்காக இருந்தபோது, ஞாயிறு மாலை நாமும் இங்கு தானே நின்றுகொண்டு இருந்தோம்'.
அதே வாரம், ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் ஒரு நிகழ்வு. நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் உரையாற்றுவதை கேட்கவும், அவருடன் உரையாடவும் சென்றிருந்தேன். இங்கும் ஒரு நேர்த்தியான கருத்தரங்கு கூடம், பயிற்சி வகுப்புகளுக்கான அறை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி படிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதி என ஒரு 'மினி' அண்ணா நூலகத்தை கொண்டு இருந்தது. இங்கும் தேநீர் கொடுக்கப்ப்பட்டது(வரலாறு மீண்டும் முக்கியம்). இரண்டு நூலகத்தின் நிகழ்விலும் ஏறக்குறைய அரங்கு நிரம்பி இருந்தது(நானே நூலகம் செல்லும்போது, அரங்கு நிறையத்தானே செய்யும்) . "நல்ல வசதிகளுடன் உள்ளது இந்த நூலகத்தை, நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்" என்று அப்போது கூறிய ஈரோடு கதிர் அவர்கள், கடந்த ஞாயிறு அன்று, ஈரோடு வாசல் குழுமத்தின் மலர்களை பேச அழைத்து 'புத்தகங்களைப் பேசுவோம்' என்ற தலைப்பில் நடத்தியது, அண்ணா நூலகத்தின் நிகழ்வு போல் ஆன ஒன்று. .
இந்த இரு நூலக வடிவமைப்பின் ஒற்றுமையை விட மேலும் ஆச்சர்யமூட்டிய ஒன்று. அண்ணா நூலகம் பற்றி சில தகவல்களை அறிய இணையத்தில் தேடும்பொழுது, வந்து விழுந்தவை 'பொன்மாலைப் பொழுதின் காணொளிகள்'(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் . இந்த காணொளிகள் காலைப்பொழுதையும் அதன் நடைபயிற்சியையும் 'கற்றலின் கேட்டல் நன்று' என இனிதாக்குகின்றன. படிக்க நேரம் கிடைக்காமல் அ. விருப்பம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த காணொளிகள் வரம்.
அதிலிருந்து எனது செவிக்கு உணவிட்ட சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடனான வயிற்றின் உணவைப்பற்றிய கலந்துரையாடல் இங்கே.
https://www.youtube.com/watch?v=yGJ4xCbYDfg&t=5643s
Sunday, April 09, 2017
நீரோடும் எங்கள் ஈரோடு
மாட்டு சாணத்தில் வாசல் மெழுகி
உறவினர்கள் ஒன்றாககூடி
வீட்டோடு திருமணம்.
தொப்புள் கொடி அறுபட
மூதாட்டி துணையோடு
மனையில் சுகமாக பிறந்த
மழழை...
ஊரார் ஊட்டி வளர்க்க
வளர்ந்து.
மேனிக்கு கடலைமாவு
தமக்கை முகம் பூசும் மஞ்சள்
தலைவார தேங்காய் எண்ணெய்.
என்று தூய்மை பேணி.
நம் பெயர் வெட்டிய சிறு போசியில் உண்ட உணவு.
எவ்விடத்திலும் அள்ளி பருகும் நீரும்
நோம்பி என்றால் மட்டுமே அதுவும் கட்டும் தாத்தா
நூல் சேலையில் கொசுவம் வைத்து கட்டும் பாட்டி
நோம்பிகளுக்கு மட்டுமே புடவை எடுக்கும் அம்மா
பள்ளிசெல்ல ஓட்டமும் நடையும்
வேலைக்கு போக ஒரு மிதிவண்டியும்
ஈரோடு டவுனுக்கு செல்ல சில டவுன் பஸ்களும்
தேடி இலை பறித்து
வைத்தியம் செய்யும் ஒரு பாட்டி
சுற்றம் சூழ குளிப்பாட்டி
பச்சையில் பாடை கட்டி
ஆவரஞ்செடிக்கு பால் ஊற்றி
பாட்டுப்பாடி
விடை அனுப்பப்பட்ட நம் தாத்தா...
Thursday, March 16, 2017
பெற்றோர்கள் vs பிள்ளைகள்” உலகம் - நேற்று, இன்று, நாளை!
தவிதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா... நம் தாத்தா பாட்டிக்களை நமது அப்பா அம்மா எப்படி கவனித்துக் கொண்டனர் என்பதை நாம் பார்த்து வளர்ந்தோம். அதைப்போல நாமும் நம் அப்பா அம்மாவுக்கு செய்கிறோம இன்றைய கால சூழலுக்கு தகுந்தது போல். நமது குழந்தைகளும் நம் நடவடிக்கைகளைப பார்த்தே பல விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அதனைப்பார்த்து அவர்களாகவே கால சூழலுக்கு தகுந்து அன்பு செலுத்துவார்கள் ...
15-Mar-17 :
”பெற்றோர்கள் vs பிள்ளைகள்” உலகம் - நேற்று, இன்று, நாளை!
ஈரோடு வாசல் குழுமம்
வட்டார மொழி
வட்டார மொழி அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கும்.... இது என்னோட அனுபவத்தில் ஒ்ரு பகுதி....
நாங்க ரெண்டு பேர், நம்ம கொங்குநாடு பகுதில இருந்து பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க சாரி... படிக்க போனோம்... ஒரு ரூம்ல பட்டறை போடறது வழக்கம்...ஒருநாள் பட்டறை போட்டு முடிந்ததும் நண்பன் கிட்ட நம்மூரு வழக்குல சொன்னனேன்....'செருப்ப தொட்டுக்கிட்டு வாடா '-ன்னு...
'எப்படி செருப்ப போய் தொட்டு பார்த்துட்டு ஒடிரூவீன்ங்களா' ... அப்டீன்னு ஆரம்பிச்சு....ஒட்டுக்கா ஓட்டி தள்ளிட்டாங்க... ஒட்டுக்காவுக்கும் சேர்த்து ஒரு ரவுண்ட் வர...
நாம மட்டும் சும்மா விட்டுறுவோமா...
'கல்லவுட்டு எறி' ல ஆரம்பிச்சு...ஒரு ரவுண்டு வருவோம்...
இப்படி வட்டார மொழி அனுபவங்கள வச்சு ஒரு தொடரே எழுதலாம்....
1-Feb-2017 வட்டார மொழி பற்றி ஈரோடு வாசல் குழுமத்தில்
ஓபிஸ் vs சசிகலா
இந்த 9 நாட்கள் நடந்த நிகழ்வுக்கான ஆரம்பப்புள்ளி சல்லிக்கட்டு எழுச்சி என்றே கருதுகிறேன். சமூக வலைதளங்கள் மக்களின் பிரதிபலிப்பாக இரண்டு நிகழ்வுகளையும் ஒரே மாதிரி இட்டு சென்றன. சல்லிக்கட்டுக்கு இரு கட்சிகளின் மறைமுக ஆதரவு இருந்தது.. ஆனால் பிந்தைய நிகழ்வுக்கு உட்கட்சிப் பூசல் என்று வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருந்தோம். இது அடக்குமுறையை எதிர்த்து பதிவு செய்யப்படுவதற்கான அடுத்த முயற்சி..
இந்த நேரத்தில், ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறேன்...ஐடி மக்கள் அதிகம் நிறைந்த பெங்களூரு ஒய்ட்பீல்டு பகுதியில், ஒன்றரை ஆண்டுக்கு முன் சாலை மற்றும் அடிப்படை தேவை யை பூர்த்தி செய்ய கோரி ஐடி மக்கள் அமைதியான மனித சங்கலி நடத்தினர். எதிர் பாராத அளவுக்கு ஐடி மக்கள் பங்கேற்றனர். அடுத்த 8 மாதங்களில் படிப்படியாக நிறைவேறியது. இது சமூக வலைதளங்களால் மட்டுமே சாத்தியமானது.
சமூக வலைதளங்கள் அடுத்த புரட்சி களில் மிகமுக்கிய பங்காற்றும் என்றே கருதுகிறேன்
15-Feb-2017 ல் ஈரோடு வாசலில் இட்ட பதிவு...
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
Inspiring story.., I have read through, voted and circulating to you all., thatz the minimum that I can do 2010 – உலகின் தலை சிறந்த ஹீர...

