கடந்த சனிக்கிழமை. மாலை நேரம். ஈரோட்டில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறினேன். சூரம்பட்டி நால்ரோடு நிறுத்தம். வழக்கத்திற்கு மாறாக திமுதிமு என்று கூட்டம் முண்டியடித்தது, கூடவே டாஸ்மாக் வாடையும். "என்னங்க, இங்க இவ்வளவு பேர் எறுகிறாங்க" நடத்துனர் அருகில் இருந்ததால் வினவினேன்.
"இங்கதாங்க கடை இருக்கு" கூறிக்கொண்டே வாடைகளின் ஊடாக, அவர்களுக்கு இடையே நீந்த ஆரம்பித்தார்.
கிட்டதட்ட அங்கிருந்து மொடக்குறிச்சி வழியாக விளக்கேத்தி வரையிலான சுமார் 20 கிமீ தொலைவிற்கு, பஸ் வசதியுடன் கூடிய கடை இல்லை என்ற பொது அறிவு அப்போது தான் தெரிந்தது.
நீந்த ஆரம்பித்த நடத்துனர் மகான் இவர்களுக்கு இடையே நெளிந்து சென்று டிக்கெட் கொடுத்துக்கொண்டே செல்கிறார். தெய்வ லெவல். அவருக்கு இந்த வாடை பழகி இருக்குமோ?
நீந்த ஆரம்பித்த நடத்துனர் மகான் இவர்களுக்கு இடையே நெளிந்து சென்று டிக்கெட் கொடுத்துக்கொண்டே செல்கிறார். தெய்வ லெவல். அவருக்கு இந்த வாடை பழகி இருக்குமோ?
சரி, நம்ம ஊர் பஸ்ல ரொம்ப நல்லா காற்று வருமே, ஏன் வரலைன்னு யோசித்துக்கொண்டே ஜன்னலைப் பார்த்தேன். ஊர் நெருங்கியதை உட்கார்ந்து இருப்பர்களே குனிந்து பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு சிறிய ஜன்னல். அவர்கள் வாங்கிக்கொண்டது போக மீதி காற்று, தலைக்குமேல் உயரமாக நீட்டிக்கொண்டு இருக்கும் இருக்கை நடுவே புகுந்து, கொஞ்ச சில்லரையையும் கொடுக்காமல் போகும் நடத்துனர் போல், வர மறுத்தது. சரி, காற்று தான வரலை வெளியே வேடிக்கை பார்த்து, இந்த ஓல்டு மாங்குகளிடம் இருந்து தப்பிக்கலாம் என்று, மேல் கண்ணாடியை நோக்கினேன். கண்ணாடி முழுவதுமாக விளம்பரங்களுடன் கூடிய ஸ்டிக்கர். ஸ்ஸ்அப்பா , எங்க போனாலும்
கேட் போடறாங்களே என்று வடிவேல் மொழியோடு, ஊர் நெருங்கியதை எப்படி தெரிந்து கொள்வது என நொந்து கொண்டு, மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.
கேட் போடறாங்களே என்று வடிவேல் மொழியோடு, ஊர் நெருங்கியதை எப்படி தெரிந்து கொள்வது என நொந்து கொண்டு, மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.
தயவு செய்து பேருந்தை டிஸைன் செய்யும் புண்ணியவான்கள் நன்றாக காற்று வருவதற்கு வசதி உள்ள ஜன்னல்கள் வைத்து, குடிக்காத பயணிகள், சக பயணியின் மீது உண்ட உணவை உமிழ்வதை தவிர்க்க உதவ வேண்டுகிறேன்.
மகளிர் ஸ்பெசல் போல, டாஸ்மாக் ஸ்பெசல் வண்டியை போக்குவரத்து கழகங்கள் யோசிக்கலாம்.
#ஈரோடு #பயணங்கள்
No comments:
Post a Comment